Friday, November 18, 2011

என் அருகே நீ இருப்பதாய் நினைத்து

யாரோ ஒருவரால்
உச்சரிக்கப்படும்
உன் பெயரைக்கேட்டு
என் விழிகள் ஏனோ
திரும்பிபார்க்கின்றன
தேடுகின்றன
என் அருகே நீ இருப்பதாய் நினைத்து...

Wednesday, November 16, 2011

உன்னையே உனக்கு பிடிக்கும்

சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்

ஆனால்

உண்மையான அன்பு கிடைக்கும் போது தான் உன்னையே உனக்கு பிடிக்கும்...

Tuesday, November 15, 2011

அது 60 வயசு கெழவி மச்சி

திரும்பி
திரும்பி
பார்க்க வைத்தது

திரும்பாத
அவளின் முகம்
ஆனால்
அவள் திரும்பியதும் மாறியது
என் முகம்

அவ்வ்வ்வ்
அது 60 வயசு கெழவி மச்சி...

பட்டாம்பூச்சியென

பட்டாம்பூச்சியென இமையடிக்கும்
உன்னிரு விழிகளில்
எனைத் தொலைக்கவா
இத்தனை வருடம் தவமிருந்தேன்…

அழ வைப்பது

அழ வைப்பதும் அலைய வைப்பதும் காதலின் செயல்
அன்பு செலுத்துவதும் ஆறுதல் சொல்வதும் நட்பின் செயல்...

அன்புக்கும் ஆசைக்கும் வித்தியாசம்

அன்புக்கும் ஆசைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்...
ஒருவரை பிடிக்க காரணம் இருந்தால் அது ஆசை
காரணம் இல்லாமல் ஒருவரை பிடித்திருந்தால் அது அன்பு...

உன் நினைவு

உன்னிடமிருந்து யார் யாரோ
எதை எதையோ
எடுத்துச் செல்வார்கள் !
ஆனால்
நான் மட்டும் எதையும் எடுத்துச் செல்லமாட்டேன்
உன் நினைவுகளை தவிர ....