மறைக்கவோ மறக்கவோ
இயலாத ஒன்று
உன்னுடன் குறைவாக பேசிய
எனக்கே எனக்கான தருணங்கள்
எதிர்பாராத சமயத்தில் கிடைத்த
உன் பாராட்டுக்கள்
எதிர்பார்த்து ஏமாந்த
சில நிமிடங்கள்
புரிந்தும் புரியாதது போல் சில உணர்வுகள்
கவிதைகளால் பேசிய சில வரிகள்
நான் மட்டுமே அனுபவித்த
உன்னோடு கழித்த அந்த நொடிகள்
எனக்கு மட்டுமே கிடைத்த நீ
இனி என்ன வேண்டும்
எனக்கு இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
போதும், என் ஆயுளுக்கும்...
நன்மை செய்தால்..
துரோகத்தை மறந்துவிடு..!
நண்பன் செய்தால்
குற்றத்தை மறந்துவிடு…!
காலம் தந்தால்…
சோகத்தை மறந்துவிடு..!
காதல் தந்தால்…
காயத்தை மறந்துவிடு..!
இன்பம் தந்தால்…
இன்னல்கள் மறந்துவிடு…!
பிரியம் தந்தால்…
பிரிவை மறந்துவிடு..
உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை....
உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை....
இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும் தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . . இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட...
பெண்ணே.... நான் உன்னை பார்த்தவுடன்..... என் இதயத்தில்; உன் உருவத்தை வரைந்து வைத்தேன். ஆனால்; நீ என்னை பார்த்தவுடன்..... என் இதயத்தையே; உன் உருவமாக செதுக்கிவிட்டேன்.
பஞ்சு மெத்தையில்- நிம்மதியாக தூங்கும் உனக்கு; என்னை பற்றிய..... கனவு வருவதே இல்லை. ஆனால்; உன்னை பார்த்த- நாள் முதல்; தூக்கத்தை இழந்த நான்..... கனவே கதி என்று கிடக்கிறேன்!
அப்போது - உன் நினைப்பால்; எனக்கு தூக்கம் கூட..... ஒரு கனவாகவே இருந்தது. ஆனால்...... இப்போது- உன் நினைவுகள் நிரைந்த; என் கனவுகளும் என்னோடு ..... சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது!
காதலென்பது என்னவென்று நாம் காதலித்தவரை தெரியாது ஒரு முறை கூட சொல்லி கொண்டதில்லை உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும்
“உன்னை நான் காதலிக்கிறேன் என்று” இன்று இதற்கென்றே சில இலக்கணங்கள் நம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும் இவைகளில் ஓன்று கூட நமக்குப் பொருந்தாது தொலைவில் இருந்தாலும் தொலைந்து போனாலும் தொல்லை தந்தாலும் தொடர்ந்து வருமே நம் காதல்
சாதலற்ற தேடல்… . உன் உள்ளங்கை ரேகை எனும் ஒற்றையடிப் பாதை வழியே தொடரும் என் பயணத்தில் எனக்கான வழித்துணையாய் எப்போதும் வருவது உன் நினைவுகளன்றி வேறென்ன சகியே..
உன் உச்சந்தலை வகிடு வழியே உயிருக்குள் இறங்கும் என் முத்தங்கள் உன்னத மெல்லிசை சிந்த உன் வெட்கங்கள்தானடி ஜதியே..
சாதலற்ற தேடல் கொண்ட காதல் வாழ்த்துக்களோடு…
காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்…
என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்… உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும் புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும் அழகை மட்டுமல்லாது அன்பையும் அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் !
ஆனால் நீயோ என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் நானுன் ரசிகை என்கிறாய் !
தீராத பசிகொண்ட என் ரசனைகளுக்கு திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள் நீதான் என்னும் உண்மை உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
கடிகார முள்ளைப்போல் ஒரு நொடிகூட நில்லாமல் உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும் என் நினைவுக் குதிரைக்கு பாசக் கடிவாளமிட்டு அதன்மேல் ஒய்யாரமாய் பயணம் செய்கிறாய்…
பள்ளத்தில் பாயும் நதியின் சலசலப்பைப்போல் ஓயாமல் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…
சட்டென சிலநாள் பாசி படிந்த குளம்போல் மௌனித்திடும் பொழுது மரண பயம்கொண்டு ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…
புதிதாய் பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் அதோடு ரசித்து ரசித்து விளையாடி பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து அதை ஓரமாய் வைத்துவிட்டு ஓடிப்போகும் குழந்தையின் மனநிலையில் ஒருவேளை விழுந்துவிட்டாயோ என நான் அறிய முற்படுகையில்…
முரட்டு வார்த்தைகளால் என்னை முறித்துப் போடுகிறாய்…
உன் சின்ன சின்ன வரிகள் என்னை சீக்கிரம் சாகடிக்கத் தொடங்கும் முன்…
வானமளவு நிறைந்து பூமியையே பகிர்ந்து பூக்களைப்போல் திறந்து மற்றதெல்லாம் மறந்து நாம் பேசிய பழகிய நாட்களில் உனக்கு தெரியவில்லையா…
நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று…
உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும் தோழனின் மேல் நண்பன் கை இருந்தால்...
Wednesday, September 14, 2011
சோகம் என்பது மேகம் அது சொல்லாமல் போகும்
ஆனால் சந்தோசம் என்பது வானம் அது நிலையானது...
MOUNTAINS CAN FLY! OCEANS CAN DRY! YOU CAN FORGET ME! HOW CAN I!!!
உனது தாயின் இதயம் மட்டும் தான் அது இறந்த பிறகும் துடிக்கும் நீ நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக...