வண்ண மயிலிறகின் மேனியடி – நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி – உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி – உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி – உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி – உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி – என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி – முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது… போதாது உன் குறும்புகளடி
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி – உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி – உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி – உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி – உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி – என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி – முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது… போதாது உன் குறும்புகளடி
No comments:
Post a Comment