காற்றுக்கூட நுழைய முனைந்து
தோற்றுப்போகும் நெருக்கம்
நம் நட்பில் கண்டோம்.....
நேற்றைய பொழுதின் நினைவுகள்
ஒற்றையாய் என் மனப்பூங்காவில்....
கடந்தகாலத்தை எண்ணிப் புன்னகைக்கவா...?
இழந்து போன எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் விடவா...?
ஒன்று நிச்சயம் உனதான நினைவுகள் ஒரு போதும் அழிவதில்லை
No comments:
Post a Comment