Saturday, October 8, 2011

ஒரு தலை காதல்:

நெடு தொலைவில் இருந்து ஒரு வெளிச்சம் என் மேல்
கண்டேனடி நான்  உன்னை அந்த ஒரு நொடி போதுதில்

என்னையே மறந்தேன் என் இதயத்தை உன்னிடம் தொலைத்தேன்
நிலவை சுற்றி வரும் நட்சத்திரங்கள் போல உன்னையே

சுற்றி சுற்றி வந்தேன் உனக்கு தெரியாமலே
மனசுக்குள் மத்தாப்பு உன்னுடைய பொன் சிரிப்பு

இதயத்துக்குள் ஏதோ ஒரு போராட்டம் உன்னை நினைத்து
பல எதிர்பார்புகளோட என் காதலை உன்னிடம் சொல்ல துணிந்தேன்

மனதை திடமாக்கினேன் கனவுகளில் நீந்தினேன் 
நீ சொல்லும் பதிலுக்காக நொடிகளை கடந்தேன்

விடிந்தது என் இதய துடிப்பு அதிகமானது
அளவுக்கு அதிகம் வியர்ந்தது மெல்ல மெல்ல உன்

அருகே வந்து கண்ணாடி முன் கொட்டிய வார்த்தைகளை
கண் மூடி கொண்டு உன்னிடம் ஒப்பித்தேன் உன் பதிலை எதிர் பார்த்து

அதற்கு அவள் சொன்ன பதில்
டே பொறுக்கி நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல
செருப்பு பிஞ்சிரும் ராஸ்கல்

இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்
காதல சொன்ன பாட்ட காட்டுவளுங்க காதலிச்ச பிறகு டாட்டா காட்டுவளுங்க...

No comments:

Post a Comment