Friday, September 30, 2011

என் ஆயுளுக்கும் போதும்

மறைக்கவோ மறக்கவோ
இயலாத ஒன்று
உன்னுடன் குறைவாக பேசிய
எனக்கே எனக்கான தருணங்கள்
எதிர்பாராத சமயத்தில் கிடைத்த
உன் பாராட்டுக்கள்
எதிர்பார்த்து ஏமாந்த
சில நிமிடங்கள்
புரிந்தும் புரியாதது போல் சில உணர்வுகள்
கவிதைகளால் பேசிய சில வரிகள்
நான் மட்டுமே அனுபவித்த
உன்னோடு கழித்த அந்த நொடிகள் 
எனக்கு மட்டுமே கிடைத்த நீ
இனி என்ன வேண்டும்
எனக்கு இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
போதும், என் ஆயுளுக்கும்...

No comments:

Post a Comment